Jalianwala Bagh, Amritsar


என்னார், திருச்சி

Ref: http://www.tamilpayani.com/tamilsatiram/viewtopic.php?p=2068


 

இந்த நேரத்தில் எதாவது ஒரு விடுதலைப் போர் நிகழ்வை நாம் நினைத்துப்பார்ப்போமே

அதிக பொதுமக்கள் சாகடிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக்

 

 

ஜலியன்வாலா பாக் என்ற இடத்திலே கூட்டம் நடந்தது.' பாக்' என்றால்

தோட்டம் என்று அர்த்தம். அறிக்கை கூறுகிறது:"பெயரைப் பார்த்தால் தோட்டம் என்று தோன்றும்: ஆனால், ஜலியன்வாலா பாக் எந்த விதத்திலும் தோட்டம் அல்ல. உபயோகத்தில் இல்லாத ஒரு நிலம் அது. நீண்ட சதுர (ரெக்டாங்குல்) வடிவம் கொண்டது. அங்கங்கே பாழடைந்த கட்டிட இடிபாடுகள் மூடிக்கிடந்தன. அநேகமாய் முழுவதுமே அதைக் கட்டிடச் சுவர்கள் சூழ்ந்திருந்தன. அதற்குள்ளே வரப்போகச் சில வழிகளே இருந்தன. அந்த வழிகளும் நன்றாயில்லை. அடிக்கடி மக்களின் பெருங்கூட்டங்கள் அதில் நடப்பது வழக்கம் என்று தெரிகிறது. அதன் ஒரு கோடி வழியாக ஜெனரல் டையர் நுழைந்தார். அந்தக் கோடியின் நுழைவாயிலுக்கு இரண்டு புறமும் தரை மேடாக இருக்கிறது. டையர் நுழைந்த கோடிக்கு எதிர்க்கோடியில் ஒரு பெரிய கூட்டம் இருந்தது. ஜெனரல் டையர் தம் துருப்புக்களை நிறுத்திய இடத்திலிருந்து 150 கஜ தூரத்தில் உயரமாக அமைந்த மேடை ஒன்றின் மீது ஒரு மினதன்ட நின்றுகொண்டு அந்த மக்கள் கூட்டத்துக்குப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்." பாக்கில் பத்தாயிரத்துக்கு மேல் இருபதாயிரம் மக்கள் வரையில் கூடியிருந் திருக்கிறார்கள் என்று அறிக்கை மதிப்பிடுகிறது.

 

இருபத்தைந்து கூர்க்காக்கள் (அதாவது நேப்பாளப் போர் வீரர்கள்), பலூச்சி்ஸ்தானத்திலிருந்துவந்த இருபத்தைந்து பலூச்சிகள் இந்த இரு கூட்டத்தினரும் ரைஃபிள் (சிறு துப்பாக்கி) தங்கியிருந்தார்கள்; நாற்பது கூர்க்காக்கள் கத்திமட்டுமே வைத்திருந்தார்கள். இவர்களோடும் இரண்டு கவச (ஆர்மர்டு) மோட்டார்களோடும் டையர் வந்தார்."ஜலியன்வாலா பாக் பக்கமாக வந்ததும், குறுகிய நுழைவாயில் வழியாக அதனுள் இந்தப் படையுடன் டையர் புகுந்தார். கவச மோட்டார்கள் புகப் போதிய அகலமாக அந்த வாயில் இல்லை, எனவே, வெளியே தெருவிழலேயே அவற்றை டையர் விட்டு வைத்தார்". என்று அந்த அறிக்கை அறிவிக்கிறது.

 

மேலும் அது தொடர்ந்து சொல்கிறது: "பாக்கினுள் நுழைந்தவுடனே, நுழைவாயிலின் ஒரு பாக்கம் உள்ள மேட்டில் இருபத்தைந்து துருப்புக்களையும் மறு பக்கம் உள்ள மேட்டில் இன்னோர் இருபத்தைந்து துருப்புக்களையும் டையர் நிறுத்திவைத்தார். மக்கள் கூட்டத்துக்கு எந்த வித எச்சரிகையும் செய்யாமலே அவர்களைச் சுடத் தம் துருப்புக்களுக்குக் கட்டளையிட்டார். தடை உத்தரவுப் பிரகடனத்தை மீறி மக்கள் கூடியிருந்ததால், அவர்களுக்கு அப்படி எந்த எச்சரிக்கையும் செய்யத் தேவையில்லை என்று அவர் கருதினாராம். துருப்புக்கள் சுமார் பத்து நிமிட நேரம் தொடர்ந்து சுட்டார்கள். என்ன விதமான பிரசங்கத்தை மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவில்லை. மக்களில் எவரும் துப்பாக்கி தாங்கியிருக்க வில்லை. ஆனால், அவர்களில் சிலர் தடிகள் வைத்திருந் திருக்கக் கூடும்.....துருப்புகள் சுட ஆரம்பித்வுடனே, கூட்டம் கலையத் தொடங்கியது. மொத்தம் 1650 தடவை(ரவுண்டு) துருப்புக்கள் சுட்டார்கள்.... தனித் தனினயே சுட்டார்கள்; சரமாரி (வால்லி) ஆகச் சுடவில்லை....சுமார் 379 பேர் மாண்டதாக, கமிஷனின் இந்த விசாரணையில் புலனாகிறது."

 

மாண்டவர்களைப் போல் மூன்று மடங்கு மக்கள் காயமுற்றிருக்க வேண்டும் என்று அறிக்கை மதிப்பிடுகிறது. ஆகவே செத்தவர் 379 பேர்; காயமுற்றவர் 1137 பேர். இந்த இரண்டு எண்ணிக்கையையும் கூட்டிப் பார்க்கும் போது, 1650 துப்பாகிக் குண்டினால்1516 ஆள் சேதம் ஏற்பட்டிருக்கிறது. தாழ்வான 'தோட்ட'த்தில் பட்டியில் அடைபட்ட ஆடு மாடுகள் போல் மக்கள் சிக்கியிருந்திருக்கிறார்கள்; வீரர்களின் குண்டுகளுக்குச் சரியான இலக்காகியிருக்கிறார்கள்.

டையரை ஹண்டர் கமிஷன் முன் குறுக்கு விசாரணை செய்தார்கள். தம்முடைய மனப்பான்மையையும் நோக்கத்தையும் அப்போது அவர் வெளியிட்டார்.

 

கேள்வி: "சுடுவதை அடிக்கடி நீர் திசை மாற்றினீரா? மக்கள் எங்கே அடர்த்தியாய் நின்றார்களோ அங்கே பார்த்துச் சுடச் சொன்னீரா?"

தொடரும்.......

 

பதில்: "ஆமாம்; அப்படித்தான் சொன்னேன்."

இருப்பதற்குள் மிகவும் குட்டையான சுவரை நோக்கி மக்கள் ஓடினார்கள். அதுவே ஜாதியடியால் ஐந்தடி உயரம் இருந்தது. அங்கே தான் மக்களில் பலரைக் குண்டுகள் தாக்கி வீழ்த்தின.

 

கேள்வி: "கவச மோட்டார்கள் உள்ளெ புகப் போதிய வழி இருந்ததாக வைத்துக்கொள்ளுவோம். அப்போது யந்திரத்துப்பாக்கி (மெஷின்கன்) கொண்டு நீர் சுட்டிருப்பீரோ?.

 

பதில்: "ஆமாம்; அநேகமாக அப்படித்தான் செய்திருப்பேன் என்று நினைக்கிறேன்."

ஹண்டர் அறிக்கை அழுத்தமாய்ச் சொல்லுகிறது: "டையரை எங்கள் முன்னிலையில் விசாரித்த போது, அவர் இந்த விஷயத்தை விளக்கமாய்ச் சொன்னார்: தம் மோட்டார்க் காரில் வரும்போதே ஒரு தீர்மானம் செய்து விட்டாராம்; கூட்டம் போடக்கூடா தென்று தாம் விதித்த தடையுத்திரவை மீறிமக்கள் கூடியிருந்ததால், உடனே அவர்களைச் சுடுவ தென்று முடிவு செய்தாராம்."

 

விசாரணையில் டையர் கூறினார்:"அத்தனை மனிதர்களையும் கொன்று விடுவ தென்று நான் முடிவு செய்திருந்தேன்...."

 

டையர் தம் ராணுவமேல் அதிகாரிக்கு ஓர்அறிக்கை (டிஸ்பாட்ச்) அனுப்பியிருக்கிறார். தம்முடைய இந்தச் சொந்த அறிக்கையில் சில வார்த்தைகளைத் தடித்த எழுத்தில் (ஐட்டலிக்ஸ்) அவரே வரைந்திருக்கிறார். அவருடைய இந்த வாசகத்தை ஹண்டர் அறிக்கை அப்படியே மேற்கோள் காட்டியிருக்கிறது. டையர் எழுதியிருக்கிறார், "நான் சுட்டேன் , மக்கள் கூட்டம் கலையும் வரையில் சுட்டுக்கொண்டே யிருந்தேன், ஒரு பலனை விளைவிப்பது அவசியம், அதை விளைவிப்பது என் கடமை என்று நான் கொண்டேன். என் செயல் நியாயம் என்று காட்ட இந்த அளவு சுட்டதே மிகவும் குறைந்த பட்சமானது என்று நான் கருதுகிறேன். கேவலம் கூட்த்தைக் கலைப்பது ஒன்றே அப்போது முக்கியம் என்று நான் கருதவில்லை; அங்கே கூடியிருந்த மக்களுக்கு மட்டும் அல்ல; இதைவிட முக்கியமாக, பஞ்சாப் எங்கும் உள்ள மக்களுக்கெல்லாமே போதிய அளவு பய பக்தியை (மாரல் எஃபெக்ட்) உண்டாக்கவேண்டியிருந்தது. ராணுவ நோக்கில் பார்த்தால் இது புலப்படும். மித மிஞ்சிய அளவு கடுமையாகச் சுட்டதாக இதைச் சொல்லமுடியாது...

 

இதைப்பற்றி ஹண்டர் அறிக்கை கூறுகிற முடிவு இது:

"தமது கடமைபற்றி டையர் இப்படிக் கொண்ட கருத்து, துரதிருஷ்ட வசமானது.... அவர் அவ்வளவு நேரம் சுட்டதன் மூலம் மகத்தான பிழை (க்ரேவ் வரர்) புரிந்து விட்டார் என்று எங்களுக்குத் தோன்றுகிறது"

 

 

அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது: "ஜலியன்வாலா பாக்கில் காயம் அடைந்தவர்களைக் கவனிக்க, டையர் எந்த ஏற்பாடும் செய்யவில்லை; இதைப்பற்றி எல்லாரும் குறை கூறுகிறார்கள்." விசாரணையில் டையர் சொன்னார்:"தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் மனுச் செய்துகொண்டிருந்தால், அப்படி உதவ நான் தயாராக இருந்தேன்."

பஞ்சாபில் பிரிட்டிஷ் ஆக்டிங் கவர்னராக அப்போது ஸர் மைக்கேல் ஓட்வியர் என்பவர் வேலைபார்த்து வந்தார். டையரின் செயலை அவர் ஆமோதித்தார்;கலவரங்களைப் புரட்சி எழுச்சி (ரிபெல்லியன்) என்று அவர் குறிப்பிட்டார். ஹண்டர் கமிஷன் இப்படி அபிப்பிராயம் கூறுகிறது; "பஞ்சாபில் ஒரு நெருக்கடியை டையர் காப்பாற்றழி விட்டார் என்றும், சிப்பாய்க் கலகம் போன்ற பெரிய கலக எழுச்சியைத் தடுத்துவிட்டார் என்றும் வேறு சிலர் கூட வர்ணிக்கிறாரக்கள். ஆயினும் இந்த மாதிரி முடிவு செய்வது சாத்தியம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், பிரிட்டிஷ் ஆட்சியைக்கவிழ்க்க வேண்டும் என்று, கலவரங்களுக்கு முன்னதாக எந்த விதமான சதியும் (கான்ஸ்பிரஸி) நடக்கவில்லை".

புரட்சி செய்து எழும்(இன்ஸரெக்ஷன்) நோக்கம் எவருக்கும் இல்லை; அப்படி யாரும் திட்டமிவும் இல்லை. இது மட்டும் அல்ல; மேலும் ஒன்று கூறுகிறது ஹண்டர் அறிக்கை: " 10-ஆம் தேதி எழுந்த கலவரம் சில மணி நேரத்துக்குள்ளே அடங்கிவிட்டதாக சம்பவம் எதுவும் மீண்டும் நிழவில்லை. 10-ஆம் தேதியிலே கூட, பொறுப்பு (சார்ஜ்) வகித்த அதிகாரி தம் கடமையைப் புரிந்திருந்தால் அந்தக் கொடுங் குற்றங்களையும் - பாங்க் உத்தியோகஸ்தர்களைக் கலகக்காரர் கொன்ற கொலைகளை - அவர் அநேகமாகக் தடுத்திருக்க முடியும்".

இரண்டரை நாட்கள் அமிர்தசரஸில் அமைதியே நிலவியது. அதற்குப் பிறகே டையரின் கசாப்பு வேலை (புச்சரி) நடந்திருக்கிறது. அநாவசியமாக அவர் படுகொலை (மாஸக்கர்) புரிந்தார். அந்த நாளில் இந்தியாவிலி ஓங்கியிருந்த பரிட்டிஷ் ராணுவ மனோபாவத்திலே பிறந்ததுதான் இந்தப் படுகொலை. இந்த மனோபாவத்தை விளக்க, ஹண்டர் அறிக்கை ஒரு மேற்கோள் தருகிறது. டில்லியில் பதவி விகத்த ஜெனரல் ட்ரேக்-ப்ராக்மான் என்பவரல் சொன்ன இந்த வாசகந்தான் அந்த மேற்கோள்: " ஆசியாக்காரன் எதையும் மதிக்கமாட்டான்; வலிமை (ஃபோர்ஸ்) ஒன்றைக் கண்டால் மட்டுமே மதிப்பான்."

 

ஜலியன்வாலாவில் தாம் செய்த படுகொலை குறித்துப் பெருமையோடு ரத்னச் சுருக்கமாக டையர் சொன்னார்:"ஜோரான நல்ல காரியம் ஒன்றைச் செயயப் போவதாகத்தான் நான் எண்ணினேன்."

 

செய்தகொடுமை போதாது எனறு,மக்களுக்கு ஜெனரல் டையர் ஓர் அவமானமும் இழைத்தார்; இகழ்ச்சிக்குரிய ' தவழும் உத்திரவு' (க்ராலிங் ஆர்டர்) ஒன்றைப் பிறப்பித்தார். அமிர்தசரஸ் பெண் பள்ளிக்கூடம் ஒன்றில் தலைமை ஆசிரியையாக இருந்த மிஸ் ஷெர்வுட் என்ற பெண்ணை ஏப்ரல் 10-ஆம் தேதி ஒரு கலகக் கூட்டம் காட்டுமிராண்டித்தனமாக் கொலை செய்து விட்டது. ஜலியன்வாலா பாக் ரத்தமுழுக்கு நடந்து பல நாள் சென்ற பின்பு, டையர் ஓர் உத்திரவு போட்டார். மிஸ் ஷெர்டவுட்டைக் கலகக் கூட்டம் எங்கே தாக்கியதோ அந்தத் தெருவில் எந்த இந்தியன் போனாலும் சரிதான; அவன் மண்டியிட்டுத் தவழ்ந்து கோண்டே போகவேண்டும் - இது அந்த உத்திரவில் ஒரு ஷரத்து. சில குடும்பத்டதினர் தங்கள் வீடுகளுக்குப் போக இந்தத் தெரு ஒன்றே வழியாக இருந்தது. அவர்களுங்கூட இப்படித் தவழ்ந்து கொண்டு தான் போகவேண்டும்.

 

ஷெர்வுட் அடிபட்ட இடத்தில், கசையடி மேடை (விப்பிங் போஸ்ட்) ஒன்றையும் டையர் அமைத்தார்: தம் உத்திரவை எந்த இந்தியனாவது மீறினால், அவனை இங்கே கொண்டு வந்து நிறுத்திப் பகிரங்கமாய் அவனுக்குக் கசையடி கொடுக்கச் சொன்னார். அமிர்த சரஸில் சில ஜில்லாக்களில் வழியிலே போகும்போது பிரிட்டிஷ் அதிகாரிகளுள் எவனையாவது கண்டால் வண்டியிலோ குதிரை போன்ற விலங்கின் மீதோ சவாரி செய்கிற இந்தியன் எவனும் கீழே இறங்கி விடவேண்டும் ; பெருங்குடையோ குட்டைக் குடையோ பிடித்துக்கொண்டு போகிற எவனும் அதை இறக்கி விடவேண்டும்; அந்தப் பிரிட்டிஷ் அதிகாரிக்குச் 'சலாம்' வைக்கவேண்டும் - இது டையரின் கட்டளை.

 

பிரிட்டிஷ் இந்தியா மந்திரி(ஸெக்ரட்டரி அவ் ஸ்டேட் ஃபார் இண்டியா) பதவியல் இருந்த ஸர் எட்வின் மாண்டேகு உத்தியோக ரீதியில் வைஜிராயலார்டு செம்ஸ் ஃபோர்டுக்கு 1920 மே 26-ல் ஒரு கடிதம் எழுதினார். "ஜலியன்வாலா பாக்கில் ப்ரிகடீர் ஜெனரல் டையர் தம் செயலுக்கு அடிப்படையாகக் கொண்ட கோட்பாட்டை மன்னர் பிரானின் சர்க்கார் அழுத்தமாக மறுக்கிறது" என்று அதில் கூறினார்.மேலும் "நாகரிக சர்க்காருக்குரிய எந்த லட்சணத்தையும் டையர் போட்ட 'தவழும் எத்திரவு' மீறிவிட்டது" என்று எழுதினார்.டையரின் செயல் கண்டு எண்ணற்ற ஆங்கிலேயர் வெட்க மடைந்தார்கள். ஆனால் அதை ஆதரிக்காமலும் இல்லை.

டையரைச் சர்க்கார் ராஜீனாமாச் செய்யச் சொல்லியது. விமாங்களைக்குறி பார்க்க உதவியாகத் தூரம்காணும் கருவி(ரேஞ்ஜ் ஃபைண்டர்) ஒன்றைத் தமது ஆயுளின் இறுதிக் காலத்தில் டையர் கண்டு பிடித்தார். ப்ரிஸ்டல் நகரில் ஓய்வு பெற்று வாழ்ந்து,1927 ஜுலை 23-ல் அவர் இறந்தார்.

 

அங்கே ஒரு வாவேசு அய்யரும் இல்லை , வாஞ்சிநாதனும் இல்லை.

_____________

வாய்மையே வெல்லும்

என்னார்